எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆண் ஒருவர் திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில் மயங்கினார்
திருகோணமலை 5ம் கட்டை சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து, எரிபொருளை நிரப்ப அருகாமையில் நெருங்கிய வண்ணம் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (17) காலை இடம் பெற்றது.
மோட்டார் சைக்கிளில் பெற்றோல் நிரப்ப வந்த ஒருவரே இவ்வாறு வலிப்பு ஏற்பட்டு திடீரென மயக்க நிலையை அடைந்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
குறித்த எரிபொருள் நிலையத்தில் பெற்றோலை பெற பல சிறுவர்களும் வெற்று போத்தல்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.
முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களுக்கு தலா 1000 ரூபாவுக்கும் கேன்களில் 500 ரூபாவுக்கு மட்டுமே பெற்றோல் விநியோகம் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



பிற செய்திகள்