கிழக்கில் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின்  கண்காணிப்பு விஜயம் (படங்கள் இணைப்பு)

கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ராஜித சிறி தமிந்த அம்பாறை மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்று (17)மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஜுன் 2 ஆந் திகதி உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்ற பின்னர் குறித்த கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ராஜித சிறி தமிந்த அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு சென்று குறைநிறைகளை ஆராய்ந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலைய சிரேஸ்ட அதிகாரிகள் கனிஸ்ட அதிகாரிகளின் பிரச்சினைகளை ஆராயும் முகமாக வருகை தந்த அவர் கல்முனை ,பெரிய நீலாவணை ,சவளக்கடை, சம்மாந்துறை, காரைதீவு ,நிந்தவூர், அக்கரைப்பற்று ,உள்ளிட்ட பொலிஸ் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தார்.

இவ்வாறு விஜயம் செய்த பின்னர் கடந்த காலங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையங்களுக்கான வளப்பற்றாக்குறைகள் எதிர்வரும் காலங்களில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

சில பொலிஸ் நிலையங்களின் அமைவிடம் மற்றும் பொதுமக்கள் தேவை கருதி மிக விரைவாக நிரந்த பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விஜயத்தின் போது அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே.ரத்னாயக்க , கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர், பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத் , அக்கரைப்பற்று ,சவளக்கடை, காரைதீவு, நிந்தவூர் ,பொலிஸ் நிலை பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *