கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் காயங்களுக்குள்ளாகியிருந்த யானை இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது.
புத்தளம் – எலுவாங்குளம் கலா ஓயா பாலத்திற்கு அருகிலுள்ள காட்டில் கடந்த 17 நாட்களுக்கு முன்னால் கட்டுத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிருகங்களை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் யானையின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வனஜீவராசிகள் கிராமவாசிகள் குறித்த யானையைக்கு தொடர்ந்தும் உணவளித்து வந்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறைக் காரணமாக குறித்த யானைக்கு முறையான முறையில் சிகிச்சையளிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காரணத்தினாலே, காட்டு யானை உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த காட்டு யானை 30 வயது என மதிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


பிற செய்திகள்