வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு

வடக்கில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன இலாகா திணைக்களம் ஈடுபடவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

வன சரணாலயப் பகுதிகளில் தனியார் காணிகள், விவசாய நிலங்கள் மற்றும் பாரம்பரிய விவசாய நிலங்கள் இருந்தால் அவை கையகப்படுத்தப்படாது என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது வன்னி மாவட்ட உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் முல்லைத்தீவில் நாயாறு மற்றும் நந்திக்கடல் ஆகியன வர்த்தமானியில் 2017 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டன என்றும் அவை மட்டுமே அங்கு வனஜீவராசிகள் வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இருப்பினும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்வதற்கு அதிகாரிகள் குழுவொன்றை வடக்கிற்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply