வெருகல் பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வாழ்வதற்கான இல்லறம் எனும் செயற்றிட்டத்தின் கீழ் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் அனுசரணையில் மக்கள் சேவை மன்றத்தினால் திருகோணமலை வெருகல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பரஞ்சோதி எனும் விசேட தேவையுடைய குடும்பத்திற்கு நிரந்தர வீடு நிர்மாணித்து அவற்றினை கையளிக்கும் நிகழ்வு நேற்று (04)திங்கட் கிழமை மன்றத்தின் தலைவர் எம் ரீ் எம். பாரிஸ் மற்றும் வெருகல் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயக்குமாா் உதயவேந்தன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
வன்னி ஹோப் நிறுவனத்தினால் வீடுகள் இன்றி ஓழைக் குடிசைகளில் வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் இன,மத வேறுபாடின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நலன்விரும்பிகள், வெளிநாட்டு கொடை நிறுவனங்கள் போன்றவர்களின் ஆதரவுடன் வன்னி ஹோப் நிறுவனத்தினால் இது போன்ற திட்டங்கள் அமுலாக்கப்பட்டு வருகின்றது.
அந்த அடிப்படையில் மேற்குறித்த வீடு நிர்மாணிப்புக்காக அவுஸ்ரேலியாவில் உள்ள தேவ் மற்றும் லலிதா மகாதேவன் குடும்பத்தாா் நிதி உதவியுடன் அவர்களுடைய தாயாரான காலஞ்சென்ற பூரணம் காந்தி விஜயரத்ணம் அவர்களின் நிணைவாக இந்த வீடு நிர்மாணித்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,