கிளிநொச்சியில் பொலிஸார் மீது தாக்குதல்; வாள்களுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி, தர்மபுரம் கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் இரண்டு வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்;று இரவு குறித்த பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு மக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, விசாரணைக்காகச் சென்ற விசேட பொலிஸ் பிரிவினர் மீது வாள் வெட்டு வன்முறை இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமையுடன், அவரிடம் இருந்த இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply