இங்கிலாந்து வீதியில் கூத்தாடிய இலங்கை வீரர்கள் விசாரணைக்கு அழைகப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்த போது, குறித்த வீரர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர்.

இலங்கை அணியின் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோரே இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி நாளை (29) அவர்கள் இலங்கை கிரிக்கெட் சபையில் ஆஜராகவுள்ளனர்.
தற்சமயம் குறித்த வீரர்கள் தற்காலிகத் தடையை எதிர்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.