சிறுவர் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம்

சிறுவர்களை பணிக்கு அமர்த்துதல், துன்புறுத்தலுக்கு ஆளாக்குதல், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 0112 433 333 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம், சிறுவர்களை பணிகளுக்கு அமர்த்தியுள்ள இடங்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு நகரில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியுள்ள இடங்களை கண்டறிவதற்காக 30 இடங்களில் நேற்று (27) சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *