அரச மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் வரும் இரண்டு வாரங்களுக்கு வீட்டில் இருந்து பணி செய்வது தொடர்பான சுற்றறிக்கை வெளியாகியுள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் பாடசாலை கற்றல் நடவடிக்கைககள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகளை இணைய வழியில் நடத்துவது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பான சுற்றுநிருபம் கல்வியமைச்சினால் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.
நகர்புற பாடசாலைகளுக்கும் கிராமங்களை அண்டிய பாடசாலைகளுக்கும் வெவ்வேறான சுற்றுநிருபங்களை வெளியிடுவது குறித்து கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இவ்விதமாக பாடசாலை நடவடிக்கைகளும் மாற்றங்களுக்கு உட்படுமா என்பது தொடர்பாக இதுவரை கல்வியமைச்சினால் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
பிற செய்திகள்




