
பாடசாலைகளில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு பணிக்கு சமூகமளிக்க
துவிச்சக்கர வண்டிகளை வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கல்வி அமைச்சர்
சுசில் பிரேமஜயந்த இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் அஜித் கே திலகரத்ன, தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு நியாயமான தீர்வாக வேலைத் திட்டத்தின் முதல் கட்டமாக பாடசாலை
காவலர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கமைவாக கல்விசாரா ஊழியர்களை பாடசாலை வளாகத்திலிருந்து பிற்பகல் 3.45 மணி நேரத்திற்கு மாறாக பிற்பகல் 2 மணிக்கு வெளியேற அனுமதிக்கும் யோசனைக்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
கல்வி சாரா ஊழியர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் வேலைத்திட்டம் தென்கொரியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு மத்தியில் கடமைக்கு சமூகமளிப்பதில் அரச ஊழியர்கள் பல சிரமங்களை எதிர் கொள்வதாகவும் இந்த பிரச்சினைகளுக்கு
தீர்வு காணப்படாவிட்டால்,எதிர்காலத்தில் நாடு ஸ்தம்பிதமடைந்து முடங்கும் நிலைக்குச்
செல்லும்.
நாடு முழுவதுமான முடக்கம் அரசாங்கத்தால் திட்டமிடப்படாது, ஆனால் குறுகிய திட்டமிடப்படாத முடிவுகளால் மக்கள் நிலவும் பிரச்சினைகளை சமாளிக்க இயலாமையின் விளைவினால் அந்நிலைமை ஏற்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்




