2011 உலகக் கிண்ண ஆட்டநிர்ணய விசாரணையில் திருப்தி இல்லை

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது ஆட்டநிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில் திருப்தி இல்லை என அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மான் எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் மஹிந்தானந்த அழுத்கமகே அம்பலப்படுத்தியிருந்தார்.

இருப்பினும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கூறியதற்கு சரியான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்து சட்டமா அதிபர் சமீபத்தில் விசாரணையை முடிக்க முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply