டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது  ருவிட்டர் பக்கத்தில் இவ்வாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.

குறித்த ருவிட்டர் பதிவில் அன்புமணி ராமதாஸ் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.

நடப்பாண்டில் சுமார் 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் நன்னீரில்தான் உருவாகின்றன.

அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் பணியாகும்.

நீர் தேங்குவதற்கான வாய்ப்புகளை சரி செய்ய வேண்டும். பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கொள்கலன்கள், வாகனங்களின் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையிலுள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளூராட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் ஊடாக  டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply