குருநகர் மீனவர்களின் படகை மோதி அவர்களை கடலில் தூக்கி வீச முயன்ற இந்திய மீனவர்கள்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள், யாழ்.குருநகர் மீனவர்களின் படகை மோதி தள்ளியதுடன் மீனவர்களை கடலில் துாக்கி வீசுவதற்கு முயன்றதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும் தெரியவருகையில்,

குருநகர் பகுதியில் இருந்து நேற்று மீன்பிடி தொழிலுக்காக ஒரு படகில் மூவர் சென்ற நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இலங்கை கடற்பரப்பில் அமைந்துள்ள கக்கடதீவு பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில், அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய ரோலர், இலங்கை மீன்பிடி படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்தியுள்ளது.

மேலும், இந்திய மீனவர்கள் படகில் இருந்த குருநகர் மீனவர்களை தாக்கி படகில் இருந்த மூவரையும் கடலில் தூக்கிப் போடவும் முயன்றுள்ளனர்.

இதேவேளை, இந்திய ரோலர் படகு மோதியதில் குருநகர் மீனவர்களின் படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை சேர்ந்துள்ளனர்.

Leave a Reply