எரிபொருள் பவுஸர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயம்

சாவகச்சேரி எரிபொருள் நிலையத்தில் நேற்றுமுன்தினம் எரிபொருள் பெற வந்த குடும்பஸ்தர் , எரிபொருள் பவுஸர் மோதியதில் காயமடைந்துள்ளார் .

சாவகச்சேரி எரிபொருள் நிலை யத்தில் நேற்றுமுன்தினம் எரிபொ ருள் விநியோகிக்கப்படுகின்றது என்ற தகவலையறிந்த குடும்பஸ்தர் , எரிபொருள் பெறுவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார் .

இதன்போது குறித்த எரிபொருள் நிலையத்துக்கு எரிபொருளை வழங்கிவிட்டு கைதடிப் பாலத்தில் சென்றுகொண்டிருந்த எரிபொருள் பவுஸர் மோதியதில் குடும்பஸ்தர் காயமடைந்தார் .

காயமடைந்த குடும்பஸ்தர் நாவற்குழி கோவிலாக்கண்டியைச் சேர்ந்த வைரமுத்து ஜெகராசா ( வயது -30 ) என்பவராவார் .

மேலும் சாவகச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *