
மாஸ்கோ, ஜுன் 18
பாரியளவிலான கஞ்சா போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்க முன்னாள் தூதர் ஒருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மொஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் முன்னாள் பணியாளர் ஒருவருக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
அமெரிக்க முன்னாள் தூதுவரான Marc Fogel தூதரக பணியில் இருந்து ஒய்வுபெற்றுள்ளதுடன் அவர் ஆசிரியராக கடமையாற்றிவருகின்ற நிலையில் இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கஞ்சா போதைப்பொருள் அமெரிக்காவின் பல பகுதிகளில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் ரஷ்யா நீதிமன்றம் அதனை சட்டவிரோதமானது என அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“வணிக நோக்கமின்றி பாரியளவிலான சட்டவிரோத போதைப்பொருட்களை சேமித்து வைப்பது சட்டவிரோதமானது என ரஷ்யா தெரிவித்துள்ளது




