தரிசு காணிகளை தோட்ட மக்களுக்கு வழங்கவும்- மனோ கோரிக்கை!

உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள மலைநாட்டு தோட்டங்களில் உள்ள தரிசு காணிகளை தோட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். கொழும்பு நகரில் தொடர்மாடிகளில் மற்றும்பின்தங்கிய குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு,
நிலைமை சீராகும்வரை சமைத்த உணவு பொதிகள் வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உணவு பிரச்சினை தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே
அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கொழும்பு மாநகரத்தில் பின்தங்கிய தொடர்மாடிகளிலும், குடியிருப்புகளிலும் வாழ்கின்ற குடும்பங்கள் போதிய வருமானம் இல்லாமல் வாழ்கின்றன.
உணவு சமைக்க எரிவாயு, மண்ணெண்ணெய் மற்றும் உணவுப்பொருட்கள் இல்லாமலும் தவிக்கின்றனர். அடுத்த சில மாதங்களுக்கு, நிலைமை சீராகும் வரை,
ஒரு நாளைக்கு ஒரு முறையேனும், அவர்களுக்கு சமைத்த உணவு பொதிகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *