
முல்லை, ஜுன் 18
முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் கரடியினால் தாக்கப்பட்ட நபர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொக்காவில் காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற நபரை இரண்டு கரடிகள் தாக்கிய சம்பவம் நேற்று இடம் பெற்றது.
பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஆபத்தான நிலையில் காணப்படவில்லை எனவும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிளிநொச்சி வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.




