கோட்டா கோ ஹோம நூல் நிலையத்திலிருந்து யாழிற்கு கிடைத்த அன்பளிப்பு!

கோட்டா கோ ஹோமவில் இருந்து புத்தகங்களை யாழ்ப்பாண நூலகத்திற்கும்,யாழ்,பல்கலைக்கழகத்திற்கு வழங்குவதற்காக கோட்டா கோ ஹோமவின் அணியில் இருந்து போராட்டக்காரர்கள் சிலர் இன்றைய தினம் யாழிற்கு வருகை தந்திருக்கின்றனர் .

யாழ் ஊடக மையத்தில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்

அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் ;

தற்போதைய அரசாங்கத்தின் தவறான ஆட்சி காரணமாகவே நாட்டிற்கு இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள் என் அனைத்து விதமானவர்களின் கல்வி நிலைகளும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றது .

இரண்டு வருடங்களாக கல்வியினை சரியான முறையில் கற்க முடியாத நிலை உருவாகியுள்ளது .

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதினை வீட்டுக்கு அனுப்புவதற்காக கோட்டா கோ ஹோமவினை அமைத்திருந்தோம் . அதே மாதம் 10 ஆம் திகதி நூலகம் ஒன்றினை அமைத்திருந்தோம் .

இந்த நூலகத்தினை வெறுமனே 10 நூல்கள் எனக்கொண்டு ஆரம்பித்திருந்தோம் .ஆனால் தற்போது ஆயிரக்கணக்கான மிக பிரமாண்டமான நூலகமாக மாறியுள்ளது .

எனவே எமக்கு கிடைக்கின்ற நூல்களை , நாடளாவிய ரீதியில் கற்பதற்கு மிகவும் கஷடப்படும் மாணவர்களுக்கு இடையில் பகிர்ந்தளிக்கும் நோக்குடன் இந்த செயற்பாட்டினை ஆரம்பித்திருக்கின்றோம்.

.கடந்த மே 9 அரசாங்கத்தினால் காடையர்களைக்கொண்டு எம்மை விரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ,அந்த கலவரத்தின் போது எமது போராடட களத்தினை எரித்ததுடன் எமது நூலகத்தினையும் எரிக்க முற்பட்டார்கள் .

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன . இந்த வேதனையினை ஈடு செய்ய முடியாது .

எமது நூலாக்கத்தினை எரிக்க முற்படட சந்தர்ப்பத்தில் இந்த வேதனையினை அனைவரும் உணர்ந்தோம் .நூல்களை எரிப்பது என்பது ஒரு சமூகத்தின் கல்வி அறிவின் வீழ்ச்சிக்கு வழிவகுப்பதோடு அந்த சமூகத்தினையே அழிக்க முடியும் .

இதற்கமைய யாழ் நூலகத்திற்கும் ,யாழ் பல்கலைக்கழகத்திற்கும் நூல்களை வழங்குவதற்காக இங்கு வந்திருக்கின்றோம் .அதனை அடுத்து கிளிநொச்சி மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகளை வழங்க ஏற்பாடு செய்திருக்கின்றோம் .

,மேலும் நாடு முழுவதும் போராடடம் நடைபெறுகின்றது ,இதற்கு வழிவகைக்கும் வகையில் இந்த செயற்திடடத்தினை ஆரம்பித்திருக்கின்றோம் .

கோட்டா கோ ஹோமவின் புதிய திட்டமாக எமது நூலகத்தில் ஆன்லைன் மூலமான பாடசாலையினை ஆரம்பிக்க உள்ளோம் . என்றனர் .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *