தம்பதியினரிடம் 15 பவுண் தங்க நகைகள் அபகரிப்பு: யாழில் இருவர் கைது

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரித்த இருவர் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி கல்வியங்காடு – செம்மணி, ஆடியபாதம் வீதியில் வைத்து வவுனியாவைச் சேர்ந்த தம்பதியிடம் 15 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக அன்றே கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது .

வவுனியாவிலிருந்து வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற திருமண நிகழ்வுக்கு வருகை தந்து திரும்பிய போதே சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் நாவற்குழியைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயதுடைய இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிட்ட நகைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்ட அதேவேளை இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *