பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்குச் செல்வதற்கு தேவையான எரிபொருளைப் பெற்றுத் தருமாறு கோரி காலி பிரதேசத்தில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் மதீப்பீட்டுக்கு செல்லும் ஆசிரியர் குழுவினரால் காலி கோட்டை சவுத்லேண்ட்ஸ் பாடசாலைக்கு அருகில் குறித்த போராட்டம் இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், காலியில் உள்ள மூன்று பாடசாலைகளுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு செல்லும் சுமார் 150 ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மதீப்பீட்டுக்கு செல்வதற்கு தமது வாகனங்களுக்கு எரிபொருள் இன்மையின் காரணமாக தாம் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதே நிலைமை தொடருமானால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் எனவும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்




