நாட்டில் எஞ்சியுள்ள 6 இலட்சம் பைசர் தடுப்பூசி மருந்துகளை மியன்மாருக்கு வழங்கி, அதற்கு பதிலாக அரிசியினை பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் விநியோக சேவைகள் பணிப்பாளரும், மருத்துவ உதவிகள் தொடர்பான ஒருங்கிணைப்பாளருமான அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
மேலும், பைசர் தடுப்பூசி தொகையைப் பெற்றுக் கொள்வதற்கு மியன்மார் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் தற்போது காணப்படும் பைசர் தடுப்பூசிகள் இன்னும் சில மாதங்களில் காலாவதியாகும் நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சுகாதார துறைக்காக வெளிநாடுகளில் இருந்து 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் 1 தசம் 5 மில்லியன் டொலர்களை பொது சுகாதாரக் கணக்கிற்குவழங்கியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் விநியோக சேவைகள் பணிப்பாளர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஓமான், கட்டார், டுபாய், இத்தாலி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்




