மூன்று திறைசேரி உண்டியல்கள் ஏலம் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதற்கமைய 93 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இவ்வாறு ஏலம் விடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 91 நாட்களில் காலாவதியாகும் 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்களில் காலாவதியாகும் 25 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலம் விடப்படவுள்ளன.
மேலும், 364 நாட்களில் காலாவதியாகும் 28 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலம் விடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குறித்த ஏல விற்பனை நடவடிக்கை எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்

