கோட்டா கம ஆர்ப்பாட்டகாரர்கள் யாழ் நூலகத்திற்கு விஜயம்!(படங்கள் இணைப்பு)

கோட்டா கோ ஹோமவில் இருந்து புத்தகங்களை யாழ்ப்பாண நூலகத்திற்கும் மற்றும் யாழ்,பல்கலைக்கழகத்திற்கு வழங்கி வைப்பதற்காக கோட்டா கோ ஹோமவின் அணியில் இருந்து போராட்டக்காரர்கள் சிலர் இன்றைய தினம் யாழிற்கு வருகை தந்திருக்கின்றனர் .

அந்தவகையில் தற்போது யாழ் .நூலகத்திற்குச் சென்று நூலக நிர்வாகத்தினரிடம் நூல்கள் கையளிக்கப்படடன.

இந்நிகழ்வில் யாழ் ,நூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவுபெற்றிருந்த நினைவு நாளினை நினைகூறும் வகையில் மெழுகுவர்த்தி வீதியில் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது .

இந்த செயற்திட்டத்தினை இன்று யாழில் ஆரம்பிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் தொடர்ந்து இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *