கிளிநொச்சியில் வீட்டு மின் பாவணைக்கு பொருத்தும் பொருட்களை களவாடிய இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பளை – இயக்கச்சி பகுதியில் கடந்த 16ம் திகதியன்று ஹாட்வயார் ஒன்றினுள் புகுந்த இரு நபர்கள், இரண்டு லட்சத்து எண்பதாயிரத்து நூற்றி ஐம்பது ரூபா பெறுமதியான வீட்டு மின் பாவணைக்கு பொருத்தும் பொருட்களை திருடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிசாரிடம் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் அதிக கவனம் எடுத்து பளை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அதனடிப்படையில் வவுனியா சாந்தசோலை பகுதியில் ஒருவரும் கிளிநொச்சியில் ஒருவருமாக இருவர் (16) ம் திகதி மாலை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருடிச்சென்ற பொருட்களும் மீட்கப்பட்டன.
கைதான இருவரையும் (17)அன்று கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்




