யாழ் தீவகத்தில் முதற்கட்டமாக வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்த் தேசியக் கட்சியினரால் தற்சார்புப் பொருளாதரம் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் துண்டுப்பிரசுரம் மூலம் மக்களுக்கு கொடுக்கப்பட்டும், பிரதேச மக்களுக்கு வீட்டுத் தோட்டப் பயிராக மரவள்ளி பயிரிடுவதற்கான மரவள்ளிக் கட்டைகளும் அக்கட்சியினரால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் பொருண்மிய மேம்பாட்டு நிகழ்வு தமிழ்த் தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுவீகரன் நிஷாந்தனால் தீவகத்தில் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இந்த தற்சார்புப் பொருளாதாரத்திற்கான பிரச்சார திட்டத்தை தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்களும் இந்த தற்சார்பு பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தில் முக்கிய பங்கெடுத்து பிரதேச மக்களுடன் கலந்துரையாடி செயலாற்றிவருவதும் குறிப்பிடத்தக்கது.






