வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு பலமே – பிரதமர் மஹிந்த

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு ஒரு பலம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் குருநாகல் பிராந்திய தூதரக திறப்பு விழாவில் காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிற்கு பெரும் தொகையான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை மக்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும், கடமையை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும்.

தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதற்காக பலர் வெளிநாடு செல்லும் நிலையில், அவர்கள் நாட்டிற்கு சுமையாக அன்றி பலமாக இருப்பதாகவே நான் நம்புகிறேன்.

வெளிநாட்டில் பணிபுரியும் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் அல்லது திடீர் மரணங்கள் சம்பவிக்கும் நிச்சயமாக தூதரகத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்.

அதுமாத்திரமன்றி வேலைவாய்ப்பிற்காக அல்லது வேறு ஏதேனும் தேவைக்காக வெளிநாட்டிற்கு சென்றவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் அறியாத சந்தர்ப்பத்தில் அவர்கள் குறித்த தகவல்களை பெறுவதற்கும் தூதரக சேவைகள் பயன்மிக்கதாக அமைகின்றது.

நாட்டின் பெரும்பாலானவர்கள் இந்த தேவைக்காக கொழும்பிற்கு வருவதால் சில சந்தர்ப்பங்களில் ஒரே நாளில் தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் வடக்கு, தெற்கு மக்களுக்கு அந்த பிரச்சினை இல்லை. ஏனெனில் யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறையில் தூதரகங்கள் காணப்படுகின்றன.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வடமேல் மாகாணத்தில் தூதரகத்தை திறப்பதற்கு தீர்மானித்தாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *