தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.பவானந்தனின் ஏற்பாட்டில் தீவக வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு புங்குடுதீவு உலக மையம் மற்றும் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அனுசரணையில் வேலணை துறையூர் ஐயனார் அமுதசுரபி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இவ்விசேட செயலமர்வின் முதற்கட்ட செயற்பாடுகள் இலங்கை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி ஸ்ரீரங்கநாதன் அவர்களினால் சிறப்பாக நடாத்தப்பட்டது.
அடுத்த செயலமர்வுகள் தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களில் கல்வித்திணைக்கள சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் புங்குடுதீவு உலகமையத்தின் தலைவர் சபா பரமேஸ்வரன், செயலாளர் கருணாகரன் குணாளன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.





பிற செய்திகள்
- தனது இராணுவத்தை நவீனமயமாக்கும் சீனாவுக்கு கிடைத்த இமாலய வெற்றி!
- கோட்டா – ரணிலுடன் இணைந்து நாம் ஆட்சி அமைக்கவே மாட்டோம்! சஜித் திட்டவட்டம்
- திருமலை விபத்தில் குழந்தை உட்பட நால்வர் படுகாயம்
- சிறுவனை தாக்கிய சந்தேகநபரின் வீட்டுக்கு மிளகாய் தூள் வீச்சு
- இரு வாரங்களுக்கு பாடசாலைகள் மூடப்படுமா? அறிவிப்பு வெளியாகவில்லை

