தாயக நிலத்துக்கு நேரடி விமானம்! புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு

ஜூலை 1ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் சேவையை ஆரம்பிக்கும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

யாழிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்றையதினம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு புலம்பெயர் தமிழர்கள் தமது தாயக நிலத்துக்கு நேரடியாக விமானமூடாக வருகை தரமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *