நாட்டில் தொடரும் துப்பாக்கிச்சூடுகள்! உள்ளூரில் நடப்பது என்ன?

இரண்டு மாடி வீடொன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மாபோல துவாவத்தை பிரதேசத்தில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் இருந்து குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

இதன்போது போரா 12 ரக துப்பாக்கிகள் 2, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மற்றும் செக்கோஸ்லோவாக்கியா மற்றும் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட 07 தோட்டாக்கள் அடங்கிய மகசினுடனான ரைபள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிகளுடன் கரிம உர வியாபாரத்தை நடத்தி வந்த 59 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் எதற்காக துப்பாக்கிகளை மறைத்து வைத்தார் என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேக நபர் வத்தளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *