
முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இரவு முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் நின்ற இராணுவத்தினருடன் பொதுமகன் ஒருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில், கைகலப்பாக மாறிய நிலையில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்காகி பொது மகன் ஒருவர் தலையில் காயமடைந்துள்ளார்.
சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு பொதுமக்கள் ஒன்று கூடிய நிலையில், இராணுவத்தின் துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்சமயம் குறித்த பகுதியில் அமைதியின்மை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்




