8 வயதுக்கு குறைந்த 45 ஆயிரத்துக்கும் அண்மித்த சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது தொடர்பிலான தகவலை தொழில் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இது, இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதமாகும்.
இவர்களில் ஆகக் கூடுதலானவர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களிலேயே பணியாற்றுகின்றனர்.
தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இலங்கையில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள எண்ணிக்கை தொடர்பில் ஓரளவுக்கு திருப்தியடைய முடியும். எனினும், நாடு என்றவகையில் அதுவும் இருக்கக் கூடாது” என தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு சர்வதேச சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான வருடமாக சர்வதே தொழிலாளர் அமைப்பு பெயர் குறித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆகையால், அடுத்த வருடத்தின் நிறைவுக்குள் பாலியல் தொழில், பாலியல் தொடர்பிலான வீடியோக்களை பார்த்தல், போதைப்பொருள்களை கொண்டுச் செல்வதற்கு பயன்படுத்தல், ஆகியவற்றுக்கு சிறுவர்களை பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்துவதற்கு சர்வதேச அமைப்புடன் இலங்கை இணக்கப்பாட்டை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.