தாய்சேய் மத்திய நிலையத்தில் சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்!

புத்தளம் மன்னார் வீதியில் உள்ள தாய்சேய் மத்திய நிலையத்தில் சிகிச்சைகள் மற்றும் சேவைகள் என்பனவற்றை மீண்டும் ஆரம்பிப்பதற்கு புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த கொரோனா பெருந்தொற்று நிலைமைகள் காரணமாக புத்தளம் மன்னார் வீதியில் உள்ள மத்திய தாய்சேய் சிகிச்சை நிலையத்தின் சிகிச்சை,சேவைகள் நீண்ட காலமாக புத்தளம் – கொழும்பு வீதியில் அமைந்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு மாற்றப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக புத்தளம் நகரில் உள்ள நூற்றுக்கணக்கான தாய்மார்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
தமது வீடுகளில் இருந்து புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு செல்ல அதிக பணத்தையும் போக்குவரத்துக்காக செலவிடுவதாகவும் நகர பிதாவின் கவனத்திற்கும் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து உடன் செயற்பட்ட புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் இந்த விடயம் தொடர்பில் புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரியை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் பலனாக அடுத்த வாரம் முதல் புத்தளம் மன்னார் வீதியில் உள்ள மத்திய தாய்சேய் சிகிச்சை  நிலையத்திலேயே மீண்டும் சிகிச்சைகள் மற்றும் சேவைகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார வைத்திய அதிகாரி இணங்கத்தை தெரிவித்துள்ளார்
இந்த சந்திப்பில் புத்தளம் நகர சபை உறுப்பினர்களான ரனீஸ் பதூர்தீன், மொஹான் துமிந்த மற்றும் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *