புதுக்குடியிருப்பில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட மூவருக்கு விளக்கமறியல்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட 2 ஆம் வட்டாராம் கோபம்பாவில் பகுதியில் கடந்த 3 ஆம் திகதி தனியார் காணி ஒன்றில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேரை இராணுவத்தினர் கைதுசெய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த காணியில் அனுமதி இன்றி கனரக இயந்திரம் கொண்டு, தோண்டும் நடவடிக்கை முன்னெடுத்தவேளை இம் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

கோம்பாவில், மன்னாகண்டல், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

புதுக்குடியிருப்பு பொலிசார் கைதான நபர்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய வேளை, இவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply