
முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் நேற்றிரவு இடம்பெற்ற முரண்பாடு கைகலப்பாக மாறியதுடன் இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு மக்களை அங்கிருந்து கலைத்ததுடன் இருவரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 3 நாட்களாக எரிபொருளை பெறுவதற்காக காத்திருந்த இளைஞர்களை நோக்கி இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதன் காரணமாக இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்குமிடையில் ஏற்பட்ட மனக்கசப்பு இராணுவத்தினரால் இளைஞர்கள் மீது மிக மோசமாக இளைஞர்கள் தாக்கப்பட்டு இரண்டு பேர் காயமடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த பகுதியில் பெருமளவான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் கொட்டன் தடிகளுடன் முல்லைத்தீவு பாதையை மறித்து பொதுமக்கள் பயணம் செய்யமுடியாத வகையில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் அமைதி இழந்த போர்க்களமாக மாறிய விசுவமடு காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இராணுவத்தால் மூவர் கைது செய்யப்பட்டு முகாம்களுக்குள் அடைக்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு பொலிஸாரும் உடந்தை எனவும் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.




