தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு தற்போது இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் நெருக்கடிக்கு முகங்கொடுத்து, பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் பலர் ரயிலில் பயணிக்க ஆசைப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கிச் சென்ற சகாரிகா விரைவு ரயில் மாத்தறை ரயில் நிலையத்தில் நின்று மீண்டும் பெலியத்த புகையிரத நிலையத்திற்குச் செல்ல முற்பட்ட போது புகையிரதத்தில் ஏற முற்பட்ட இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். .
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, ரயில் சேவைகளை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும், தற்போதுள்ள ரயில் கால அட்டவணையை திருத்துவது மற்றும் நேர தாமதத்தை குறைப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிக ரயில்களை அனுப்பும் வாய்ப்பு உள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பான தொழில்நுட்ப விடயங்கள் மற்றும் பணியாளர்கள் திட்டமிடப்பட வேண்டுமென ரயில்வே பிரதி பொது முகாமையாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பிற செய்திகள்




