
கொழும்பு,ஜுன் 19
நாட்டுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அடுத்த எரிவாயு கப்பல் தொடர்பில் திங்கட்கிழமை அறிவிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு நாட்களில் விரைவாக இரண்டு எரிவாயு கப்பல்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக கொண்டு வரப்பட்ட கப்பலில் உள்ள எரிவாயு, வைத்தியசாலைகள், உணவகங்கள் மற்றும் தகனசாலைகள் என்பவற்றுக்கு இன்று பகிர்ந்தளிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்தும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மக்கள் வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.




