நாட்டின் மோசமான நிலை; 150 ரூபாய் இல்லாமல் உயிரிழந்த இளைஞன்!

மாத்தறையில் ரயிலில் ஏறும் போதும் தவறி விழுந்தமையினால் உயிரிழந்த இளைஞர் தொடர்பில் சோகமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

23 வயதான சந்தருவன் என்ற இளைஞனே இந்த சம்பத்தின் போது உயிரிழந்தார்.

குடும்பத்தின் மூத்த மகனமாக அந்த இளைஞன் குடும்பத்தினை கவனிக்க வேண்டிய பொறுப்பினை முன்னெடுத்து வந்துள்ளார்.

தனது தந்தைக்கு வீட்டில் சரியான வருமானம் இல்லை அதனால் தனி நபராக குடும்பத்திற்காக உழைத்தாக தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் 25 ரூபா கட்டணத்தில் ரயிலில் பயணம் செய்வதற்காக 2 மணித்தியாலங்கள் ரயிலுக்காக காத்திருந்துள்ளார்.

ஏனைய நாட்களில் பணி முடிந்து பேருந்தில் வீடு செல்லும் இளைஞனிடம் அன்றைய தினம் போதுமான பணம் இல்லை என தெரியவந்துள்ளது.

பேருந்து கட்டணம் அதிகரித்தமையினால் 150 ரூபாய் செலுத்தி பேருந்தில் வீட்டிற்கு செல்ல போதுமான பணம் இல்லாமையினால் ரயிலில் செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

2 மணித்தியாலங்கள் ரயில் இல்லாமல் ரயிலுக்காக காத்திருந்துள்ளார். நீண்ட நேரத்தின் பின்னர் ரயில் வந்து ஏற முயற்சித்த போது மக்களின் கூட்ட நெரிசலால் தண்டவாளத்தில் உள்ள சிறிய இடத்தில் விழுந்துள்ளார்.

2 மணித்தியாலங்கள் அவரை வெளியே எடுக்க போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக அவரை மீட்டு மருத்தவமனையில் சேர்த்த போது அவர் உயிரிழந்தார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. இந்த நிலைமையால் இளைஞனின் உயிர் பறி போயுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *