வைத்தியசாலைகளில் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதனால், நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேசமயம் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *