முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் நேற்று பதற்றம்: இராணுவம் துப்பாக்கி பிரயோகம்

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இரவு குழப்ப நிலை ஏற்பட்டது.

எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் குழப்ப நிலை ஏற்பட்டதை தொடர்ந்து இராணுவம் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளது.

அத்தோடு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும் இராணுவம் தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து அப்பகுதியில் குழப்பமான நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக எரிபொருளுக்காக காத்திருந்த இளைஞர்கள் சிலர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தின் துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *