
மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் இன்னமும் சமூகத்தை விட்டு விலகவில்லை. எனவே முதியோர் மற்றும் நீண்ட கால நோயாளர்கள் நான்காவது தடுப்பூசி பெற்றுக்கொள்வது அவசியம் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவித்தாவது,
மன்னாரில் இம்மாதம் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் கடந்த 15 ஆம் திகதி மாத்திரம் 6 தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். கொரோனாப் பெருந்தொற்று இன்னமும் மக்களை விட்டு அகலவில்லை.
ஆகவே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீண்டகால நோயாளர்கள் கட்டாயமாகவும் மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத் தின் அடிப்படையிலும் தமது நான்காவது பூஸ் டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது நலம் என்றார் .
பிற செய்திகள்

