திடீரென மயங்கி வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

பதுளை – ஹப்புத்தளை நகரில், வீதியில் சென்று கொண்டிருந்த பெண் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்தார்.

இச்சம்பவம், இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஹப்புத்தளைப் பகுதியைச் சேர்ந்த தமிழ்ப் பாடசாலை ஒன்றில் கற்பிற்கும் 51 வயதுடைய தமிழாசிரியரே இவ்வாறு உயிரிழந்தார்.

மேலும், வீதியில் மயங்கி வீழ்ந்த ஆசிரியரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எவருமே முன்வரவில்லை.

பின்னர், 1990 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்டு, ஹப்புத்தளை அரச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply