மண் அகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டாம்! மக்கள் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரசே செயலாளர் பிரிவில் புதிதாக மண் அகழ்வை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவதற்கு இடங்களை பார்வையிடுவதற்கு இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் வருகை தந்த போது விவசாயிகள் ஒன்றுகூடி மண் அகழ்வினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் மண் அகழ்வுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

கிரான் பிரசே செயலாளர் பிரிவில் மண் அகழ்வை மேற்கொள்வதற்காக அனுமதி கோரி இரண்டு விண்ணப்பங்கள் பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் குறித்த இடங்களை பார்வையிடுவதற்காக திணைக்களங்களுடன் இணைந்து பிரதேச செயலக அதிகாரிகளும் இன்று கள விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது வாகனேரி நீர்ப்பாசனத்திட்டத்தில் பட்டியடி வகுலாவெல, ஆனமடங்கி, தவனை, பிரம்படித்தீவு, நூறு ஏக்கர், மக்குரானை, பள்ளிமடு போன்ற விவசாய கண்டங்களைச் சேர்ந்த பதினையாயிரம் ஏக்கருக்கும்; அதிகமான விவசாய காணிகள் மண் அகழ்வினால் பாதிக்கப்படுவதாகவும் மீண்டும் இப்பகுதியில் மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் விவசாய நிலங்கள் இன்னும் பாதிக்கப்படும் என்பதனால் இப்பகுதியில் மண் அகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்றும் இப்பகுதயில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மண் அகழ்வு இடம் பெறுவதாகவும் அதனை இடைநிறுத்தி தருமாரும் விவசாயிகள் வருகை தந்த அதிகாரிகளிடம் கோறிக்கை விடுத்தனர்.

விண்ணப்பதாரிகள் தாங்கள் அடையாளப்படுத்திய இடங்கள் நீர்ப்பாசனத்திட்டத்திற்குள் வருவதால் இது தொடர்பாக நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள் தங்களது அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *