தெரணியகலவில் 24 வயதான இளைஞர் குத்திக் கொலை

தெரணியகல, பொரலங்காட பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் தெஹியோவிட்ட, பொரலங்காட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சனிக்கிழமை (18) உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *