
வத்தளை,ஜுன் 19
வத்தளை,மாபோல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், 5 துப்பாக்கிகளுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி வீட்டில் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சனிக்கிழமை இந்த சோதனையை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றிவளைப்பின்போது, வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட இரட்டைக்குழல் ரகத்தைச் சேர்ந்த 2 துப்பாக்கிகளும், ஒற்றைக் குழல் ரக துப்பாக்கியொன்றும், பொயிட்22 ரகத்தைச் சார்ந்த 2 துப்பாக்கிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், வத்தளை – மாபோல பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான ஒருவரென பொலிஸார் தெரிவித்துள்ளர்.
சந்தேகநபர் இன்று வத்தளை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

