
பொம்புவல,ஜுன் 19
பொம்புவல, சமனல உயன பெம்ருக்வத்த பகுதியில் வைத்து இலக்கத் தகடுகளை மூடிய காரில் வந்த குழுவொன்று இளைஞர் ஒருவரை தாக்கி கடத்திச் சென்றுள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை (17) இரவு 9 மணியளவில் இலக்கத் தகடுகளால் மூடப்பட்ட சிவப்பு நிற காரில் வந்த சிலராலேயே இந்த இளைஞர் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞரைக் காப்பாற்றுவதற்காக சிலர் காரை தாக்கியதாகவும் இருப்பினும் கார் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

