முகமூடி அணிந்து செயற்படும் அரசு; இவர்களை நம்பி சர்வதேசம் எதை செய்யப்போகிறது? அனந்தி சசிதரன் கேள்வி

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் பொய்யான தகவல்களை அறிக்கை வழங்கி சர்வதேசத்திற்கு முகமூடி அணிந்து செயற்படுகிறார் இதனை கண்டிக்கும் முகமாக இந்த போராட்டத்தினை நடாத்தியிருந்தோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறியிருந்தார்

இன்றைய தினம் யாழில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையின் போதே இவ்வாறு கூறியிருந்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

83 சதவீதமான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும், 92 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டதாகவும், புலம்பெயர் தேசங்களில் வாழுகின்ற தமிழர்களுடைய கறுப்புபட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்குள்
இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து இருப்பதனால் ஐ.நாவுடைய பொறிமுறை பெரிய தடையாக இருப்பதனால் அதனை நீக்குமாறு கோரிக்கையினை விடுத்திருந்தார்.

பொய்யான கணக்குகளை காட்டியிருக்கிறார். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடக்கிலும் கிழக்கிலும் உள்ள வலிந்துகாணாமல் ஆக்கப்படட உறவுகள் பதிவு செய்யப்பட்டவர்கள் இருக்கின்ற பொழுது இவர் யாருடன் பேச்சுவார்த்தையினை நடாத்தி இருக்கிறார்? சர்வதேசத்திற்கு பீரிஸ் முகமூடி அணிந்து ஏமாற்றுகின்ற ஏமாற்றுக்காரன்.

எனவே, இவர்களை நம்பி சர்வதேசம் எதை செய்யப்போகிறது? என்ற நிலை உள்ளது. அதனால் தான் ஐ.நா சபை கூடியிருக்கின்ற இந்த நேரத்தில், பொய்யன் பீரிஸ் சாகிற காலத்தில் இவ்வாறான பொய்யையும் பிரட்டையும் பேசி சர்வதேசத்தை ஏமாற்றுவதை கண்டிப்பதன் மூலமும், எங்களுக்கு சர்வதேசம் ஊடாக ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டின் நிலையிலும் மக்கள் நடந்தும், சைக்கிளும் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

எங்களை இனப்படுகொலை அழிப்பிலிருந்து காக்க தவறிய ஐ.நா இனை குற்றஞ்சாட்டியவர்களாகவும் பீரிஸின் முகத்திரையினை கிழிப்பதற்காகவும் இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. – என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *