எரிபொருள் வரிசைகள் அதிகரித்துள்ளதால், பெரும்பாலானோர் துவிச்சக்கரவண்டி பாவனைக்கு மாறிவருகின்றனர்.
இந்த ஆண்டில் இதுவரை 1,202 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 96 பேர் துவிச்சக்கரவண்டி விபத்துகள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எனவே, துவிச்சக்கரவண்டிகளில் முகப்பு விளக்கு, பின்பக்க பிரதிபலிப்பு விளக்குகள் ஆகியவற்றை பயன்படுத்தல், அவற்றில் பயணிப்பவர்கள் இரவு நேரங்களில் வெளிர்நிற ஆடைகளை அணிதல் என்பவற்றை முறையாக பின்பற்றுமாறு அவர் கோரியுள்ளார்.
போக்குவரத்து அடையாளங்களை பின்பற்றாமை, வீதியை கடக்கும்போது எதிரே வரும் வாகனங்களை கவனத்தில் கொள்ளாமை போன்ற விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் துவிச்சக்கர வண்டிகளை பரிசோதிக்க போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பிற செய்திகள்

