
கொழும்பு,ஜுன் 19
நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ்களுக்கும் அருகில் உள்ள இ.போ.சபைக்கு சொந்தமான டிப்போக்களின் ஊடாக எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எனவே, பஸ் உரிமையாளர்கள் அனைவரும் அருகில் உள்ள டிப்போக்களுக்கு சென்று எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
நாட்டின் எரிபொருள் குறித்த விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், பாடசாலை வாகனங்கள், சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் ஊழியர்களும் அருகில் உள்ள டிப்போக்களுக்கு சென்று தங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

