மே 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டவர்களில் 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், 5 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் சுமார் 857 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், இது தொடர்பில் தற்போது வரை 2,858 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 1,103 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்

