அவுஸ்திரேலியாவிலிருந்து 21 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

கொழும்பு,ஜுன் 19

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 21 இலங்கையர்கள் இன்று இலங்கை வந்தடைந்தனர்.

படகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டு, கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

விசேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இதேவேளை, மற்றொரு இலங்கையர் குழு கிறிஸ்மஸ் தீவிலிருந்து நாளை திங்கட்கிழமை திங்கட்கிழமை நாடுகடத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *